ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி

Share Button

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

போதுமான அளவு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காததனால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் ஏழு நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டது. இதேவேளை, மனுக்கள் தொடர்பில் எதிர்ப்புகள் இருக்குமாயின், எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை முன்வைக்க முடியும். மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி மாதம் 20, 21, 22ஆம் திகதிகளில் நடைபெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *