பங்களாதேஷ் பிரதமர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

Share Button

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா நாளை இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பங்களாதேஷின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பங்களாதேஷ் பிரதமரின் நான்கு நாள் விஜயத்தின் போது ஆராயப்படவிருக்கிறது. அத்துடன், இந்தியாவில் இடம்பெறவுள்ள இந்தியப் பொருளாதார மன்ற மாநாட்டில் அவர் உரையாற்றவுள்ளார். நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவிருக்கும் இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ரொஹிங்ஹிய நெருக்கடி உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *