உயர்தர மாணவர்களுக்கு டெப் கணினி வழங்கும் நடவடிக்கை முக்கியத்துவம் மிக்க சேவை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்கும் நடவடிக்கையானது, வேறு எவரும் முன்னெடுக்காத யுக மாற்றம் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த யுக மாற்றத்தின் பங்காளர்களாக புதிய அதிபர்கள் மாற வேண்டும் என அவர் கூறினார். புதிய அதிபர்களுக்கான பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண வைபவம் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். போட்டித் தன்மையுள்ள உலகிற்கு ஏற்ற வகையில் பயணிக்கும் மனித வளத்தை உருவாக்க வேண்டும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய வகுப்பறைகளுக்கு புறம்பாக டிஜிட்டல் வகுப்பறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஆசிரியர்கள் தேவை என அமைச்சர் குறிப்பிட்டார். அதிபர்கள் புதிய சிந்தனைகளில் நடவடிக்கை எடுத்தால், பாடசாலை கல்வியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படாதென அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீ;சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு திறமையான மாணவர்களை பயிற்றுவிப்பது மாத்திரமல்லாது, ஏனைய மாணவர்களையும் திறமையான மாணவர்களின் மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும். இது ஆசிரியர்களின் பொறுப்பென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிபர்கள் ஆயிரத்து 858 பேர் நேற்று பயிற்சிகளை ஆரம்பித்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11