நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார முறைமையை கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன், இளைஞர் – யுவதிகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு வருமானத்தை உயர்வடையச் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற விசேட சம்மேளன மாநாட்டின் போதே அவர் இதனைக் கூறினார்.

பலமான இலங்கையை கட்டியெழுப்பி, அபிவிருத்தியை சகலருக்கும் கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப் போவதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கட்சிக்காக அர்ப்பணிக்கும் தலைவரினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விசேட சம்மேளன மாநாட்டில் ஆற்றிய உரை இன்று பிற்பகல் 6.30க்கு சிற்றி எப்.எம் சேவையில் ஒலிபரப்பாகவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *