ஹொங்கொங்கின் பொலிஸ் ஊரடங்கு அமுல்

Share Button

ஹொங்கொங்கின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இடம்பெறும் ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. அதனைக் கட்டுப்டுத்தும் நோக்கில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், சீன மக்கள் குடியரசின் 70 ஆண்டு பூர்த்தி நிகழ்வுகளின் போது உக்கிரம் அடைந்திருந்தது. இதனை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், ஹொங்கொங்கில் வன்முறைகள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *