சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

Share Button

ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கடசியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார். அது மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆரம்பித்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *