ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவடைகிறது.

Share Button
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்தது.
எனினும், சீரற்ற வானிலை காரணமாக குறித்த கால அவகாசம் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, நேற்று மாலை வரையில் 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகள் அடங்கலாக 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்களுக்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் எதிர்வரும் 6ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *