எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகிறார்கள்

Share Button

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் 35 பேர் போட்டியிடுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டன. இதன்பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகள், ஏனைய இரண்டு கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்காவும், சுயேட்சையாக போட்டியிடும் 15 வேட்பாளர்களுக்காகவும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா பெரேரா, அப்பரக்கே புண்ணியானந்த தேரர், வலிசரகே சமந்த பிரியந்த பெரேரா, நந்தசேன கோட்டபாய ராஜபக்ஷ, ஆரியவன்ச திசாநாயக்க, சிறிதுங்க ஜயசூரிய, வர்ணகுலசூரிய மில்ரோய் பெர்னாண்டோ ஆகியார் வேட்மனுக்களை தாக்கல் செய்தார்கள்.

பத்தேகமகே நந்தமித்திர, பல்லியகுருகே வஜிரபாணி விஜயசிறிவர்த்தன,

சரத் மனமேந்திர, ரொஹன் பல்லேவத்த, அனுரகுமார திசாநாயக்க, கோரலலாகே சமன்சிறி ஹேரத், சரத் விஜிதகுமார கீர்த்திரட்ன, பொல்கம்பொல ரலலாகே சமிந்த அனுருத்த ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

அனுர லியனகே, அசோக்க வடிகம்மாவ, சமரவீர வீரவன்னி, அஹமட் ஹசன் முஹமட் அலவி, நாமல் ராஜபக்ஷ, சமன் பிரசன்ன பெரேரா, எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், பத்தரமுல்லே சீலாவத்தே தேரர்,

மகேஷ் சேனநாயாக்க, சஜித் பிரேமதாஸ, சுப்ரமணியம் குணரட்ன ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ரஜீவ விஜயசிங்க, இல்லியாஸ் முஹமட், பியசிறி விஜயநாயக்க, எம்.கே.சிவாஜிலிங்கம், அருண டீ சொஸ்ஸா, துமிந்த நாகமுவ, அஜந்த சொய்சா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11