ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பொதுக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலி முகத்திடலில் – கோட்டபாய ராஜபக்ஷவின் பொதுக் கூட்டம் நாளை அனுராதபுரத்தில்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்குகொள்ளும் முதலாவது மக்கள் பேரணி கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக இதில் பங்கேற்கின்றார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ பங்குகொள்ளும் 15 பேரணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன. அவற்றுள் பலவற்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், சிறிய கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் பிரதேச மட்டத்தில் 250 கூட்டங்களும் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அதரவு தெரிவிக்கும் முதலாவது பொதுக் கூட்டம் அனுராதபுரம், சல்காது விளையாடரங்கில் நாளை மாலை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதில் கலந்து கொள்வார்.