பாகிஸ்தான் பிரதமர் இன்று சீன ஜனாதிபதியை சந்திக்கின்றார்

Share Button

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று சீனா பயணமாகிறார். இரண்டு நாள் விஜயமாக சீனா செல்லும் அவர், இன்றைய தினம் பீஜிங் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன ஜனாதிபதி க்ஷீ ஜின் பிங்குடன் பிராந்திய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், அவர் சீன உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மேம்பாடு தொடர்பான பல பாரிய வேலைத்திட்டங்கள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை மேற்கொள்வது பாகிஸ்தான் பிரதமரின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனிடையே, சீனப் ஜனாதிபதி க்ஷீ ஜின் பிங், இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில், சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் பங்கு கொள்வதற்காகவே சீன ஜனாதிபதி இந்தியா செல்கிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *