சகல துறைகளுக்கும் தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணிகள் ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Share Button

ஜனாதிபதி பதவிக்கு தாம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சகல துறைகளுக்காகவும் ஜனாதிபதி செயலணிகளை ஸ்தாபித்து, அரச துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையினரின் சம்பள முரண்பாடுகளும், பதவி உயர்வு தொடர்பான நெருக்கடிகளும் தீர்க்கப்படவிருப்பதாக அவர் கூறினார். தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் கருத்து வெளியிட்டார். மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த மஹாநாயக்கர்களையும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ சந்தித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *