ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இதுவரை ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டை அரச அச்சகத்தின் பொறுப்பாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாகும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால், வாக்குச் சாவடிகளில் நிறுத்தக்கூடிய கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 70 தொடக்கம் 175 வரை அதிகரிக்கும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனது முதலாவது கூட்டத்தின் போது மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும். பிரதேச மட்டத்தில் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் மாத்திரமே சுவரொட்டிகளை பயன்படுத்தலாம்.