ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கென 500 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவிருக்கிறது.

Share Button

நாட்டில் அமுலில் உள்ள ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஏழு தசம் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையை உருவாக்குவதற்கென நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார். தனியார் துறையை கட்டியெழுப்புவதற்காக 500 பில்லியன் ரூபா வழங்கப்படவிருக்கிறது. இந்த முதலீடுகளின் நன்மைகள் ஓய்வூதியம் பெறுவோருக்கும் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற தேசிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு கௌரவமான முறையில் வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஒன்பது வருடங்களாக போராட்டி பெற்றுக் கொள்ள முடியாத ஓய்வூதியக் கொடுப்பனவுகளின் திருத்தத்தை உரிய முறையில் அவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. மூன்று தசாப்தங்களாக பணியாற்றிய அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் 44 சதவீத ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *