சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் உள்ளீர்ப்பு.

Share Button

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்கள் தோறும் பணியாளர்கள்  ஆயிரத்து 45 பேரை இணைக்க அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பதாகைகள், சுவரொட்கள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *