துருக்கிக்கு – அமெரிக்கா எச்சரிக்கை.

Share Button

துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இதேவேளை படையினரை மீளப்பெறும் டிரம்பின் முடிவினை அவரது குடியரசுக் கட்சியினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

எனினும் சிரியாவில், சுமார் ஆயிரம் அமெரிக்க துருப்பினர் நிலைகொண்டுள்ள போதிலும், வெறும் 20 பேர் மாத்திரமே சிரிய எல்லைப் பகுதியிலிருந்து மீளப்பெறப்படுவதாக அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *