ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்.

Share Button

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது தேர்தல்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதில் கலந்து கொள்வார்.

 

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்குகொள்ளும் முதலாவது மக்கள் பேரணி கொழும்பு காலி முகத்திடலில் நாளை மாலை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக இதில் பங்கேற்கின்றார்.

 

அமைச்சர் சஜித் பிரேமதாஸ பங்குகொள்ளும் 15 பேரணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன. அவற்றுள் பலவற்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், சிறிய கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் பிரதேச மட்டத்தில் 250 கூட்டங்களும் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளன.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *