ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

Share Button

ஜனாதிபதியாக தாம் தெரிவு செய்யப்பட்டால், 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிர்வாக முறையொன்றை நாட்டில் ஏற்படுத்தத் தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊழல் மோசடிகளை ஒழிக்க ஒரு தடவையேனும் தமது கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகள் இன்றி செயற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *