எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தீர்மானம்

Share Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் தற்சமயம் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு புரிந்துணர்வுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அங்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கென கட்சியின் மத்திய குழு, பாராளுமன்ற குழு, அரசியல் குழு என்பன ஆதரவு தெரிவித்ததாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்து, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *