பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவிப்பது தொடர்பான தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது – இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

Share Button

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிணை உத்தரவு ரத்து செய்யப்பட்டமையினால், இருவரையும் கைது செய்து, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீளாய்வு மனு தொடர்பான விசாரணையின் பின்னர் அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *