ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். உறுப்பு நாடுகள் உரிய தொகையை செலுத்தத் தவறினால் அடுத்த மாதம் சபையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சபைக்கு கூடுதலாக ஒத்துழைப்பு வழங்கும் அமெரிக்கா இம்முறை குறைவான பங்களிப்புக்களை வழங்குகின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. 129 நாடுகள் கடந்த டிசெம்பர் மாதத்தில் தமது நிலுவை தொகையை செலுத்தியதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *