ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு ஆசி வேண்டி சமய நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பௌத்த சாசனத்தின் அபிவிருத்திக்காக பாரிய சேவையாற்றிய தலைவர் என நுகேகொட நாலாந்த ராமாதிபத்தி விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய கினியாவெல பாலித தேரர் தெரிவித்துள்ளார். இதற்மைவாக அவரின் வெற்றிக்காக ஆசி வேண்டிய நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹகரம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தேரர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சஜித் பிரேமதாச அறநெறிக் கற்கையை வலுப்படுத்;துவதற்காக நாடு தழுவய ரீதியில் அறநெறி பாடசாலைகளுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக இந்த ஊடகவியலானர்;;;;; சந்திப்பின்போது சங்கைக்கு உக்கொடை சமிந்த தேரர் தெரிவித்தார்.