ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு.

Share Button

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிப்பதன் நோக்கம் வறிய மக்களை முன்னேற்றுவதாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, தான் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனுராதபுரம் – பளுகஸ்வௌ, ஆசிரிகம ‘கிராம சக்தி’ கிராமத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், வறுமையை ஒழிக்கும் திட்டத்தில் போதைப்பொருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எமது நாட்டில் வறுமை தீவிரம் பெறுவதற்குரிய பிரதான காரணங்களுள் ஒன்று போதைப்பொருள். எனவே, போதைப் பொருளை இல்லாதொழிக்க பரந்த தேசிய திட்டத்தை முன்னெடுத்தோம். கிராமத்தை சிறப்பாக்க வேண்டுமானால், அடுத்த சந்ததியை ஆரோக்கியமானதாக கட்டியெழுப்ப வேண்டும். எமது பிள்ளைகளை நற்பிரஜைகளாக மாற்ற வேண்டும். போதைப்பொருள் இல்லாத கிராமம் உருவாவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீனமாக செயற்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11