ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் காலிமுகத் திடலில்.

Share Button

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைததுக் கட்சிகளினதும் பங்கேற்புடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறும். இந்தப் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னர் இன்று காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச களனி ரஜமகா விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊவா மாகாணத்தில் இருந்து பிரசாரக் கூட்டம் ஆரம்பமாகும். இன்று காலிமுகத் திடலில் இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் கருத்திற்கொண்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தின்போது ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11