கிளிநொச்சி மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படவுள்ளது
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெறுவதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்டத்தி;ன் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 2010ஆம் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 43 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட இருப்பதோடு இதில் 26 ஆயிரம் வீடுகளில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளவை அதிகரிப்பதன் மூலம் 60 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான வயலில் நெற் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.