ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

Share Button

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு படைவீரர்கள் என்ற அபிமானம் மிக்க பெயரை தாமே அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், நாட்டைப் பாதுகாப்புமிக்க தேசமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு இலவசமாக உரமானியம் வழங்கப்படும் என்றும், விவசாயத்திற்குத் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் கடன் ரத்துச் செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், பயிர்ச் சேதங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயத் துறைக்கான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11