ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31ஆம், நவம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் தற்போது பாதுகாப்பிற்கு மத்தியில் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. நம்பவர் 6ஆம் திகதி இந்தப் பணிகள் நிறைவடையும் எனவும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏனைய காகிதாதிகள் அச்சிடும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல விண்ணப்பங்கள் தற்போது எண்ணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சன்ன பி சில்வா தெரிவித்தார். தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.