எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அமைதியான முறையில் இடம்பெறுகிறது
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தற்போது அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது. காலையிலிருந்து வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாக்களிப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புக்களை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, வாக்களிப்புக்கள் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது