பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு.
பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுற்றுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இவர்கள் பணிகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, தொழிற்சங்கச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சம்பத் காரியவசம் தெரிவித்துள்ளார்.