கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை புதிய திசையை நோக்கிப் பயணிக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.

Share Button

சிறப்பான பண்புகளைக்; கொண்ட சமூக மற்றும் கலாச்சார ரீதியில் இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் ஒருவர் நாட்டிற்கு அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேசிய நிகழ்ச்சி நிரல் அவசியம். தற்போது இதற்குத் தேவையான சூழல் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா நிதகஷ் பொதுஜன அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிற்பதன் மூலம் இலங்கை புதிய திசையை நோக்கி பயணிக்கும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவிய பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை முக்கியமானதாகும். இதன் மூலம் நாட்டிற்கு முக்கிய ஆலோசனைகள் பல சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2