உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக இந்தத் தெரிவுக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை இறுதியாக கூடவுள்ளதாக குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய இந்தக் குழுவை கடந்த மே மாதம் 22ஆம் திகதி நியமித்தார்.