சஜித் பிரேமதாஸ எப்பொழுதும் தூய்மையான அரசியல்வாதி என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறுகி
சஜித் பிரேமதாஸ என்பவர் எப்பொழுதும் தூய்மையான ஒரு அரசியல்வாதி என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸ தமது கொள்கைத் திட்டங்களை தற்போது தயாரித்து வருகின்றார். இளைய தலைவர்களுடன் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காக அவர் முன்னோக்கி பயணிக்கின்றார் எனவும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த தினம் கொழும்பு காலி முகத்திடலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக் கூட்டத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.
எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் பெறுபேறுகளை வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை கணிக்க முடியாதென இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார். நாடு தொடர்பிலோ, அரசியல் தொடர்பிலோ அறிவில்லாதவர்களே இது போன்ற பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.