கடந்த நான்கு வருடத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டம் காரணமாக நாட்டின் வனாந்தரத்தின் அடர்த்தி அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களினதும் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் வன அடர்த்தி குறைவடைந்துள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வன வளத்தை அதிகரிப்பதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹபரண, கல்ஓயா பாதுகாப்பு வனப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ‘வனரோபா’ தேசிய மர நடுகைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து துறைகளும் ஊழல், மோசடிகளினால் மலிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் பெறுமதி வாய்ந்த இயற்கை வளமும் அதனால் அழிவுக்குள்ளானது. கடந்த சில தசாப்த காலமாக இடம்பெற்ற பாரிய சுற்றாடல் அழிவுகளுக்கு அரசியல்வாதிகளும் மோசடி வர்த்தகர்களும் அதற்கு உதவிய அரச அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வனப் பரம்பலை 2030 ஆண்டாகுகின்றபோது 32 சதவீதமாக அதிகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான சமவாயத்திற்கு ஏற்ப இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டும் பல்வேறு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மர நடுகை மாதத்தை ஆரம்பித்து வைக்கும் பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் ஜனாதிபதி மரக் கன்றொன்றையும் நாட்டினார்.
இதேவேளை, மாத்தளை, கண்டி, குருணாகல், நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 9,900 ஹெக்டயர் நிலப்பரப்பை வனப் பாதுகாப்பு பிரதேசமாகவும் 14,800 ஹெக்டயர் சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாகவும் வர்த்தமானி மூலம் அறிவிக்கவும் இதன்போது ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11