தொழில் திறன் கொண்ட இளம் சமூகத்தினரை உருவாக்குவதே தமது நோக்கம் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்

Share Button

தொழில் திறன் கொண்ட இளம் சமூகத்தினரை உருவாக்குவதே தமது நோக்கம் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் அவர் நேற்று முதலாவது ஊடக சந்திப்பை மேற்கொண்டார். அதன் போது உரையாற்றிய அவர், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். உலகில் எந்தவொரு நாடும் மேற்கொண்டிராத வகையில் புனர்வாழ்வளித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களுள் சிலர் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் மேலும் பலருக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11