ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கோட்டபாய ராஜபக்ஷவுடன் எதிர்வரும் சனிக்கிழமை ஒப்பந்தத்தில் கைசாத்திடுகிறது.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் எதிர்வரும் சனிக்கிழமை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கிராமமட்டத்தில் இருந்து பிரசார Nவைலத்திட்டங்கள், ஒன்றிணைந்த பேரணி தொடர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரைப் பாதுகாத்துக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கப்படுமென பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தற்சமயம் குன்றியுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டில் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கவல்ல ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவே என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே கொழும்பில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவதற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கருத:து வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி சூழ்ச்சிகளை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவதற்கென தீர்மானத்திற்கு வந்தது நாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11