நாட்டின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் பாதுகாத்து நாட்டை அபிவிருததிப் பாதையில் இட்டுச் செல்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

Share Button

நாட்டின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய எண்ணக்கருக்கள் மூலம் நாட்டின் எதிர்கால அபிவிருத்தியைத் திட்டமிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கும்போது அதற்கான உணர்வு உள்மனத்தில் இருந்து வரவேண்டும். இந்த நாட்டிற்கு ஒரு திடமான தலைமைத்துவத்தை வழங்க இந்த சஜித் பிரேமதாச தயார். நாட்டின் ஒரு பலமான சக்தியைக் கொண்டு உலகை நாம் வெற்றிகொள்வோம். இந்த நாட்டில் எவரும் அச்சப்படுவதற்கோ அடிமைகளாக இருப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.
====

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *