யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

Share Button

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்து கொண்டார். விமான நிலையத்தின் நினைவுப் படிகத்தையும் ஜனாதிபதி திரைநீககம் செய்து வைத்தார்.

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்த அலையன்ஸ் ஏயார் விமான சேவைக்குச் சொந்தமான முதலாது பயணிகள் விமானம் இன்று காலை 10.15 அளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்திய ஊடகவியலாளர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த விமானம் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் சென்னை நோக்கி புறப்படும் என எமது யாழ் எவ்எம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2