பயிர்ச் சேதங்களுக்காக நிலையான நட்டஈட்டை வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சஜித் பிரேததாஸ உறுதியளித்துள்ளார்
பயிர்ச்செய்கையில் ஏற்பாடும் பாதிப்புகளுக்காக நிலையான நட்டஈட்டை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யானை – மனிதன் மோதல்களுக்கு நிலையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். கெக்கிராவ நகரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் யானை – மனித நெருக்கடி காரணமாக பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.
வறுமையில் வாடும் மக்கள் சமூர்த்தி நிவாரணங்களை எதிர்பார்க்கிறார்கள்.
மக்களின் ஆசியுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் ஆறு மாதங்களில் மின்சார வேலிகள் உள்ளிட்ட புதிய வழிமுறைகள் ஊடாக யானை மனித நெருக்கடிக்குத் தீர்வு கண்டு, பயிர்ச்செய்கை சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிரந்தர வழிமுறையை அமைப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.