வினைத்திறனான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு

Share Button

மக்கள் எதிர்பார்க்கும் வினைத்திறன் கொண்ட அரசாங்கத்தை அமைக்க முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுவெலயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

அரச நிறுவனங்களுக்காக செயற்றிறன் கொண்டவர்கள் நியமிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் இலாபம் மீட்டும் நிலைக்கு கொண்டு செல்லப்படும். அவ்வாறான நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது.

தேசிய தொழில்துறைகள் பாதுகாக்கப்படும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இளம் சமுதாயத்தினரின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *