ரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கம் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share Button

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. வீதிகள் பலவற்றின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். சில பிரதேசங்களின் போக்குவரத்துக்காக கடற்படையினரின் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம், களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களுக்கு அமைய, ஆயிரத்து 600 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 114 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையினால் புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேர் தற்காலிக முகாம்;;;;;;;;;களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய தென் மாகாணத்தின் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *