ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த மூன்று வருடங்களில் பல வெற்றிகளை பெற்றிருப்பதாக ரோஹித்த அபேகுணவர்தன கூறுகிறார்

Share Button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடத்திற்குள் பல வெற்றிகள் பெறப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் இளம் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசியாவின் பாரிய கட்சியாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் 85 சதவீதமான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். அதன் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *