எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான பல அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Share Button

புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பொலன்னறுவை நீர்வள வேலைத்திட்டத்தின் கதுருவல நீர் விநியோக மத்திய நிலையம் மற்றும் நீர்த்தாங்கிக் கோபுரம் என்பன இன்று திறக்கப்பட்டன.

பொலன்னறுவை புதிய நகரம், பழைய நகரம், கதுருவல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் வகையில் 224 கோடி ரூபா செலவில் பொலன்னறுவை நீர்வள வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, 43 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட செவனபிட்டிய நீர்வாழ் உயிரின மத்திய நிலையமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ரண்மத்கண்டிய சுகாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *