3 ஆயிரத்து 600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும்

Share Button

தற்போது நிலவும் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் நீங்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 40 விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. 37 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதேவேளை, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புத் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் நுகர்வோர் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *