யானை – மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

Share Button

யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி அளித்துள்ளார்.

ஆதிவாசி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹியங்கனை நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித-யானை மோதலுக்கு ஒரு நிலையான தீர்வை நாங்கள் வழங்குவோம்;. இதன்மூலம் பொது மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சிக்கலின்றி முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியும் எனக் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தின் கீழ், பழங்குடி மக்கள் மீதான எமது பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். சமுர்த்தியைத் தவிர, வறிய நிலையில் உள்ள சமுதாயத்தை அதிலிருந்து மீட்பதற்கு ஜனசவிய திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்துவோம் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11