கிராம அபிவிருத்திக்காக விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்
கிராம அபிவிருத்திக்காக விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
கல்வித் துறையை முறையான விதத்தில் மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கிராமிய வீதிகள், சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் என்பன துரிதமாக விரிவுபடுத்தப்படும் எனவும் அவர குறிப்பிட்டார்.
நுகவெல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் கூறினார்.