பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி நாளை திறந்து வைக்கவுள்ளார்

Share Button

பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட இலங்கை இராணுவ நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை திறக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளினுடைய தலைமையகங்கள் ஒரே நிலையத்தில் அமைப்பதற்காக 77 ஏக்கர் பரப்பில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

53 தசம் மூன்று பில்லியன் ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இது அமையப்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் தலைமையக கட்டடத் தொகுதியின் முதலாவது கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த தலைமைக் காரியாலயமே நாளை ஜனாதிபதி தலைமையில் திறக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *