தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்

Share Button

தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.

பெலவத்த, அக்குரேகொடயில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *