சகல சமூகத்தினரையும் சமமாக மதிக்கும் நாட்டை கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதி

Share Button

இனவாதம், மதவாதத்தை ஒழித்து சகல மக்களையும் சமமாக மதிக்கும் நாட்டை உருவாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே மக்கள் எனும் ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப உள்ளதாக அவர் கூறினார். யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை சகல பிரதேச செயலக மட்டத்திலும்;, புதிய தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் புதிய தொழில்நுட்ப நிலையங்களை அமைக்கவுள்ளதாக அவர் கூறினார். வறிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக சமுர்த்தி திட்டத்திற்கு மேலதிகமாக ஜனசவிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே அவர் இதனை கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *