அயோத்தி தீர்ப்பை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Share Button

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ள நிலையில், மேலும் பலர் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வரலாற்று முக்கிய தீர்ப்பின் காரணமாக எவ்வித பிரச்சினைகளும் தோன்றாமல் இருக்கும் வகையில் இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பை, கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு கருதி முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இணையத்தள பாவனையாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடாமல் இருக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *