புதிதாக திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Share Button

இந்த நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தரவௌவில் இருந்து அம்பாந்தோட்டை வரையான 16.558 கிலோ மீற்றர், பரவாகும்புகவில் இருந்து அந்தரவௌ ஊடாக மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 21.79 கிலோ மீற்றர், கடவத்தையில் இருந்து கெரவலபிட்டி வரையான 28.86 கிலோ மீற்றர் வெளிப்புற சுற்றுவட்டம் ஆகிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பரவாகும்புக மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு இடையிலான அதிவேக வீதியில் பயணிக்கும் சகல வாகனங்களும் ஒரே பிரிவாகக் கருதி கட்டணம் அறவிடப்படும். பரவாக்கும்புகவிற்கும் சூரிவௌவிற்கும் இடையில் பயணிக்கும் வாகனங்களுக்கு 100 ரூபா அறவிடப்படும். சூரிவௌ மற்றும் மத்தளவிற்கு இடையில் பயணிக்கும் வாகனங்களுக்காக 100 ரூபா கட்டணம் அறவிடப்படும். ஹம்பாந்தோட்டை மற்றும் பரவாக்கும்புகவிற்கும் இடையில் பயணிக்கும் வாகனங்களுக்கு 200 ரூபா அறவிடப்படும்.
வெளியேறும் பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டணம் அறிவிடப்படவுள்ளது. டந்த வியாழக்கிழமை குறித்த நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11