கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

Share Button

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சை டிசம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் 7 இலட்சத்து 17 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர். ஆகக்கூடிய மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்ற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணம் இரண்டாம் மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு ஆகக்கூடுதலான தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

நேபாளம் – காத்மண்டு நகரில் இலங்கை தூதரக அலுவலகத்தில் இம்முறை பரீட்சை மத்திய நிலையமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் 7 பேர், சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *